சவுதி: போர்ச்சுக்கலின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நசீர் கிளப் அணி 2025 ஜூன் வரை ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாட ஒப்பந்தம் ஆனார்.

இந்த நிலையில் சவூதியின் கிளப் அணியான அல்-நஸர் அணியின் ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளார் என சவூதி அரேபியாவின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. வரும் 2030ல் உலக கோப்பை கால்பந்து தொடரை சொந்தமண்ணில் நடந்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement