உடல் முழுக்க அடர் முடியுடன் பிறந்த குழந்தை: ஷாக்கான டாக்டர்ஸ்: எதனால் தெரியுமா?

இரட்டை தலை, நான்கு கால்கள் என பல வகைகளில் குழந்தைகள் பிறப்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் கருமை படர்ந்த நிலையில் உடலில் 60 சதவிகிதம் முடியுடன் ஒரு குழந்தை உத்தர பிரதேசத்தில் பிறந்திருக்கிறது.
அதன்படி உத்தர பிரதேசத்தின் ஹர்டோய் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த செவ்வாயன்று (டிச.,27) பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அதே பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு பிறந்த குழந்தையை கண்டதும் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
image
ஏனெனில் அந்த குழந்தையின் முதுகிலும் முன்பக்க உடலில் இரு பக்கவாட்டிலும் கரும் படலத்துடன் 60 சதவிகிதம் அளவுக்கு அடர்த்தியான முடி வளர்ந்தபடி இருந்திருக்கிறது.
இதனையடுத்து ஆய்வு செய்ததில் பிறந்த குழந்தைக்கு Giant congenital melanocytic nevus என்ற பிறவியிலேயே சரும பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசியுள்ள மருத்துவர் பங்கஜ் மிஷ்ரா, தன்னுடைய 22 வருட அனுபவத்தில் இப்படியான நிகழ்வை கண்டதே இல்லை என ஆச்சர்யமாக பேசியிருக்கிறார்.
மேலும் குழந்தைக்கு இப்படியான சூழல் இருப்பதை ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யாக்ரம் (Rashtriya Bal Swasthya Karyakram)என்ற அரசின் அமைப்பிடமும் தெரிவிக்கப்பட்டதாகவும், குழந்தைக்கு மேல் சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்பி வைப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
image
மேலும் தாயும் சேயும் நலமுடனே இருப்பதாகவும் விரைவிலேயே குழந்தை குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே அரியவகை சரும பிரச்னையுடன் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாக குழந்தையை காண குவிந்திருக்கிறார்களாம்.
Giant congenital melanocytic nevus என்றால் என்ன?
மிகப்பெரிய மெலனோசைடிக் நெவஸ் என்பது ஒரு தோல் பிரச்னை மெலனோசைட்டுகள் எனும் நிறமி-உற்பத்தி செய்யும் உயிரணுக்களால் ஆனது. இதனால் சருமத்தில் புற்றுநோயை ஏற்படுத்தாத படலம் ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.