உதகை: ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்களை வெட்டியதாக வனச்சரகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீட்டுக்கல் பகுதியில் 234 ஏக்கரில் ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி ரூ.48 லட்சம் மதிப்புள்ள 370 மரங்கள் வெட்டி விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் உதகை தெற்கு வனச்சரகர் நவீன்குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசிதரன், வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
