இணையத்தில் வெளியான மகளின் ஆபாச புகைப்படங்கள், கொந்தளித்த சீரியல் நடிகை

பிரவீணா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் குரல் கலைஞர் ஆவார். ஏஷ்யாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவி பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். இது இந்தியாவின் மிக நீண்ட புராணத் தொடராகும். இவர் பல மலையாளப் படங்கள் மற்றும் பல முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி மற்றும் துணைப்பாத்திரங்களில் நடித்துவருகிறார்.

சாதனைக்கு மேல் சாதானை
1992 ஆம் ஆண்டு கௌரி திரைப்படத்தின் மூலம் இவர் நடிப்புத் தொழிலுக்கு வந்தார். 1998 ஆம் ஆண்டில் அக்னிசாட்சி மற்றும் 2008 இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள அரசு திரைப்பட விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். கடந்த 2010 இல் எலெக்ட்ரா மற்றும் 2012 இல் இவன் மேகரூபன் ஆகிய படங்களுக்காக சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்றார். அதேபோல் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

 

சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் பிரவீணா
அந்தவகையில் தமிழில் இவர் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி, போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், ராஜா ராணி 2 மற்றும்
இனியா ஆகிய சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை பிரவீணா.

ஆபாச போட்டோக்கள் வெளியீடு
இதற்கிடையில் கடந்த ஆண்டு தனது போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக புகார் அளித்திருந்தார், அதன் பேரில் டெல்லியை சேர்ந்த பாக்கியராஜ் என்ற மாணவரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் தற்போது நடிகை பிரவீணாவும் அவரது மகளும் சைபர் க்ரைம் போலீஸில் மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த வகையில் “முன்னதாக அந்த நபர் குறித்து அளித்த புகார் காரணமாக வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மீண்டும் தனது மற்றும் தனது குடும்பத்தினரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்”. எனவே நடிகை பிரவீணா தன்னையும் தனது மகளையும் ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் போட்டோக்கள் வெளியிடப்படுவதாக போலீஸில் புகார் அளித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.