2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


மின் கட்டணத்தை அதிகரிக்க இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், 2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது என  இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அது மிகவும் அநியாயமானது எனவும் அதனை மக்கள் செலுத்த வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Srilanka Goverment Against Protest

மின்கட்டணம் அதிகரிப்பு

இதனையும் மீறி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை செய்ய வரமாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.   

2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Srilanka Goverment Against Protest

இதேவேளை, 2023 ஜனவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எவ்வாறாயினும் உத்தேச மின் கட்டண அறிவிப்பிற்கு தொழிற்சங்கங்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வர்த்தக சமூகம் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகள் போன்ற பல தரப்பினரின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.