திமுக அமைச்சராகும் வானதி..? அண்ணாமலையின் அடுத்த ஆக்ஷன்… காயத்ரி ரகுராம் பரபர

தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பது தெரிய முக்கிய காரணமாக இருந்தவர்களில் தமிழிசை சௌந்தரராஜனையும், வானதி சீனிவாசனையும் சொல்லலாம். ஒரு மாநிலத்தில் குறைவான வாக்கு வங்கியுடன் ஒட்டுமொத்த கட்சிகளின் எதிர்ப்பு, விமர்சனங்களை தாங்கிக்கொண்டு சீரான வளர்ச்சியை பெற்றவர்கள் என்பதற்கும் மேற்கண்ட இவர்கள் சாட்சி. தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவுக்கு கடமையாற்றிய பயனால் தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

அதேபோல, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் கடுமையான மும்முனை போட்டிக்கு மத்தியில் உலக நாயகன் கமல்ஹாசனை 1,500 வாக்குகள் வித்தியாசத்தில்

வெற்றி பெற்று கோவையின் முதல் பாஜக வேட்பாளர் என்ற சிறப்பை அவர் கட்சிக்கு பெற்று தந்துள்ளார்.

தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினராகவும், பாஜக மகளிரணியின் தேசிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் வானதி சீனிவாசனை குறித்து வெளியாகியிருக்கும் தகவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் விமர்சகரான சவுக்கு ஷங்கர் ஏறக்குறைய இதுவரை வெளியிட்ட தகவல்கள் நடந்திருந்தாலும் தற்போதைய தகவல் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது.

சவுக்கு ஷங்கரின் பரபரப்பான ட்வீட்;

பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளார். பாஜகவால் தொடர்ந்து அவர் ஓரங்கட்டப்பட்டு வருவதாக உணர்கிறார். வட தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பொறுப்பில் இருந்து வானதியின் கணவர் சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் வானதிக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. சீனிவாசன் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருந்து வந்தவர். தற்போது, திமுகவில் இணைவதை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினின் அமைச்சரவையில் வானதிக்கு ஒரு இடம் கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து 6 மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக டிவிட்டரில் கொளுத்தி போட்டுள்ளார்.

சவுக்கு ஷங்கர் போட்டுள்ள ட்வீட்டிக்கு கேள்வி எழுப்பியுள்ள காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்வீட்டில் கூறியது; பா.ஜ.க கட்சியில் இருந்து மேலும் ஒரு மூத்த தலைவரை தூக்கிவிடலாம் என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இப்படி வதந்தியை கிளப்பலாம்.

யார்தான் தேசிய கட்சியில் இருந்து வெளியே விரும்புகிறார்கள்? பெரும்பாலும் நாம் விரட்டியடிக்கப்படுகிறோம். தேசிய மகளிரணி தலைவர், பார்லிமென்ட் உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய முக்கிய பொறுப்புகளில் உள்ள ஒருவரை தூக்க அவர் மீது திமுக என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது . இது பழங்காலத்து உத்தி என்று காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.