டெல்லியில், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார், விபத்தில் சிக்கிய பெண்ணை சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார்.
டெல்லியின் Kanjhawala பகுதியில், பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி இழுத்துச்செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், தகவலின் பேரில் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது மோதி, காரின் அடியில் சிக்கிய அவரை பல கிலோமீட்டர் இழுத்துச் சென்றதில், பெண் பலியானது தெரிய வந்தது. விபத்து தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இளம்பெண் உயிரிழந்தது குறித்து விளக்கமளிக்க போலீசாருக்கு, டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.