எலும்பு முறிவால் வருகைப்பதிவில் பின்னடைவு… செமஸ்டர் தேர்வெழுத மாணவருக்கு அனுமதி மறுப்பு!

சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
தனது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் முடங்கியதால், பல்கலைக்கழக வருகைப் பதிவு குறைந்துள்ளது என்று கூறும் சட்டக்கல்லூரி மாணவரொருவர், வருகைப்பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வை எழுதும் வாய்ப்பை இழந்திருக்கிறார். மாணவரின் வருகைப்பதிவு குறைவை சுட்டிக்காட்டிய பல்கலைக்கழகம், தேர்வுக்கான அனுமதியை மறுத்திருக்கிறது. இந்நிலையில் தன் மகனை`செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்’ எனக் கூறி மாணவரின் தந்தை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் மாணவருடைய வருகைப்பதிவு 47 சதவிகிதம் மட்டுமே இருந்ததாலும், டெல்லி பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுகளை அந்த மாணவர் மீறியுள்ளதாகவும் கூறப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதியை மறுத்துள்ளது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் நருலா அடங்கிய தனி நீதிபதி அமர்வு முன்பு இன்று (ஜனவரி 3) விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’விதிகளின்படி, ஒவ்வொரு மாணவரும் வகுப்புகளில் குறைந்தது 70 சதவீத வருகையைப் பெற வேண்டும். சிகிச்சை காரணமாக அவர் ஓய்வில் இருந்தாலும், அவரது வருகை 59 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கும் குறைவாகவே அவருக்கு இருக்கிறது’ என்றார்.
image
இதை ஏற்ற நீதிமன்றம், மாணவரின் வருகை மிகக் குறைவாக இருப்பது குறித்து அவரின் குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்பியது. குறிப்பாக ”வகுப்பு என்பது மாணவர் பயிற்சி பெறும் இடம். உங்கள் மகனிடம், ’ஏன் வகுப்புக்கு செல்லவில்லை’ என்று நீங்கள் கேள்வி எழுப்பினீர்களா? யாரும் அவருடைய அறிவை குறைசொல்லவில்லை. ஆறு மாதமாக உங்கள் மகன் கஷ்டப்படுகிறார் என்று நீங்கள் வேதனைப்படுகிறீர்கள். ஆனால், அவர் 50 சதவீத வகுப்புகளில் கொள்ளவில்லை” என்ற நீதிபதிகள், மாணவர் வருகை குறைவாக இருப்பதால் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார் என உத்தரவிட்டது.
மேலும், மாணவர் படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டாலும், அவரது வருகையில் 70 சதவீதத்தை எட்ட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.