சென்னை விமான நிலைய கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் உள்ள பொம்மைக் கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் நேற்று இரவு அதிரடிச் சோதனை மேற்கொண்டதில், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு நேற்று இரவு சென்னை T1 உள்தாட்டு விமான நிலையத்தில் அமைந்துள்ள Ms Tiara Toys Zonet, Tiara Trading Company-ல் BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
image
இந்தசோதனையின் போது, இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி, கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 327 பொம்மைகள் (198 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 129 எலக்ட்ரிக் பொம்மைகள்) பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசால் வெளியிடப்பட்ட பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020-ன் படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட, விநியோகிக்கப்பட்ட, விற்கப்படும் வாடகைக்கு எடுக்கப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட சேமித்து வைக்கப்பட்ட அல்லது விற்பனைக்காகக் காட்டப்படும் அனைத்து பொம்மைகளும் BIS ஆல் கட்டாயமாக தரச் சான்றளிக்கப்பட்டு BIS ஸ்டாண்டர்ட் மார்க் பெற்றிருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினர்.
குறிப்பிட்ட இச்சோதனையில் பிடிப்பட்ட வர்த்தகர் பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020ஐ மீறியதன் மூலம், BIS சட்டம் 2016 இன் பிரிவு 16 மற்றும் 17ஐ மீறியுள்ளார் என்று குறிப்பிட்ட அதிகாரிகள், அவர்மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.
image
இந்தக் குற்றத்தை செய்வோருக்கு BIS சட்டம், 2016 இன் பிரிவு 29 இன் படி, (முதல் மீறலுக்கு) இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2,00,000-க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும். அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள், தயாரிக்கப்பட்ட / விற்கப்படும் / ஒட்டப்படும் பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை நீட்டிக்கப்படலாம்.
image
பொது மக்கள் எவருக்கேனும், ஏதாவது இடங்களில் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது தெரிந்தால் பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் BlS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.