பிளஸ் 2 ஹால் டிக்கெட்; வெளியானது அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேற்கு குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி முறையில் வருகிற ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை உரிய தேர்வு கட்டணத்துடன் மேல்நிலைப் படிப்பு என்றால் கூடுதலாக ரூ.1,000 மற்றும் பத்தாம் வகுப்பு ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு துறை இ சேவை மையங்களின் விளம்பரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது குறித்த தகவல்களை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையி. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2023ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு தொடங்குவதால் ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் https://dge1.tn.gov.in/”>https://dge1.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளிகள், மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.