நான் பிளேபாய் தான்! உலகளவில் பரபரப்பை கிளப்பிய ஆபாச ஒடியோ.. உடைத்து பேசிய இம்ரான் கான்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆபாச ஒடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

உலகளவில் பரபரப்பை கிளப்பிய ஒடியோ

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் சையது அலில் ஹைதர் என்பவர் இம்ரான் கான் போனில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ஓடியோவை வெளியிட்டார்.
இந்த ஓடியோவானது அந்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட் 2022ல் ஓய்வுபெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்தேன். அப்போது எனது கட்சியை எனது கட்சியை சேர்ந்த சிலரின் ஒடியோ மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.

நான் பிளேபாய் தான்! உலகளவில் பரபரப்பை கிளப்பிய ஆபாச ஒடியோ.. உடைத்து பேசிய இம்ரான் கான் | I Was Playboy Says Imran Khan

நான் ப்ளே பாய் தான்

மேலும் அவர் என்னை ‘ப்ளே பாய்’ எனவும் கூறியிருந்தார்.
ஆமாம் கடந்த காலத்தில் நான் ப்ளே பாய் தான். நான் ஒருபோதும் மிகவும் நல்லவனாக, ஏஞ்சலை போல இருந்துள்ளதாக கூறியதில்லை. இது போன்ற ஆபாசமான ஒடியோ அல்லது வீடியோவை வெளியிட்டு நாம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறோம்? நான் பதவியில் இருந்து நீக்கப்பட பஜ்வாவும் ஒரு முக்கிய காரணம்.

அவர் திட்டமிட்டு என்னை ஏமாற்றி விட்டார். அவர் ‘டபுள் கேம்’ ஆடிவிட்டார்.
இப்போது தேர்தல் நடந்தாலும் நான் வெற்றிப் பெறுவேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதை தடுக்கவே ராணுவத்தில் பஜ்வா, ஒரு ‘செட்-அப்’பை செய்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.