நான் மீண்டும் தாலி முடிச்சு போட்டு கொள்ளாததற்கு காரணம்! மனம் திறந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகை


பிரபல தமிழ் திரைப்பட நடிகை பிரகதி தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

கணவருடன் விவாகரத்து

தமிழில் வீட்ல விஷேங்க, பெரிய மருது, ஜெயம், கெத்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரகதி.
47 வயதான பிரகதி தனது கணவரை பல ஆண்டுகளுக்கு முன்னரே விவாகரத்து செய்துவிட்டார்.
இதுவரையில் மறுமணம் செய்யாமல் தனது பிள்ளைகளை தானே வளர்த்து வருகிறார்.

தான் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என சமீபத்திய நேர்காணலில் பிரகதி வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு விசுவாசமாக இருக்கும் நண்பரின் தேவை இருந்தது.
நான் மீண்டும் தாலி கட்டி கொள்ள நினைக்கவில்லை. இருப்பினும், ஒரு துணை எப்போதும் வரவேற்கத்தக்கது தான்.

நான் மீண்டும் தாலி முடிச்சு போட்டு கொள்ளாததற்கு காரணம்! மனம் திறந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகை | Actress Pragathi About Not Getting Married Again

tollywoodnet

மிகவும் பிடிவாதமாக இருக்கலாம்.

என்னுடன் பழகக்கூடிய மற்றும் என்னுடன் என் வழியில் நடக்கக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது சவாலாகிவிட்டது. அத்தகைய முதிர்ச்சியுள்ள ஒருவரை கண்டால் நன்றாக இருக்கும்.

சில பிரச்சினைகள் என வரும்போது, ​​நான் மிகவும் பிடிவாதமாக இருக்கலாம். நான் இளமையாக இருந்தால், என்னால் சில மாற்றங்களைச் செய்ய முடியும், ஆனால் என் வயதில் அதை கடைபிடிப்பது கடினம். அதனால் தான் மறுமணம் செய்யவில்லை என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.