ஓடும் பேருந்தில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்துகாட்டி கையும் களவுமாக பிடிபட்டதால் கதறி அழுத இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியின் ரோஹிணி பகுதியில் டெல்லி மாநகர பேருந்தில் இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை பயணம் செய்துள்ளார். அப்போது அவர்முன் நின்ற இளைஞர் அப்பெண்ணிடம் சுய இன்பம் செய்து காட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் சைகை கொடுக்கவே மார்ஷல் சந்தீப் சகரா என்பவர் வீடியோ எடுத்துள்ளார். மேலும், கையும் களவுமாக பிடிபட்ட அந்த இளைஞர் கதறி அழுததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த இளைஞர் பீகாரைச் சேர்ந்தவர் என்றும், அவரை போலீஸில் ஒப்படைத்தும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் சீனியர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ”புதன்கிழமை அந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலானதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த வடக்கு ரோஹிணி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுமன் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணை அணுகி அவரிடம் வாக்குமூலம் பெற முயன்றபோது அவர் புகாரளிக்க மறுத்துவிட்டதால் இளைஞரை கைது செய்யவில்லை. எச்சரித்து அனுப்பப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
