Viral Video : ஓசி குடி… புத்தாண்டு போதையில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்

Chennai Drunkard Girl Viral Video : சென்னை சைதாப்பேட்டை அருகே கடந்த ஜன. 1ஆம் தேதி, புத்தாண்டு முதல் நாள் அன்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் குடிபோதையில் வந்தார். 

அப்போது, அவரை நிறுத்தி குடிபோதையில் வாகனத்தை இயக்கியதை மீட்டர் வைத்து உறுதிப்படுத்தினர். தொடர்ந்து, ஓட்டுநர் உரிமத்தை கேட்டதற்கு,’அதெல்லாம் வீட்டில் இருக்கு வாருங்கள் எடுத்து தருகிறேன்’ என போலீசாரை கையை பிடித்து இழுத்துச் சென்று தகராறில். அதை தொடர்ந்து அவருக்கு அபராதம் விதித்தனர். மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டியதும் தெரியவந்தது. இதனால் மொத்தமாக ரூ. 15,000 அப்பெண்ணிற்கு சென்னை போலீசார் அபராதம் விதித்தனர். 

அப்போது போக்குவரத்து போலீசாருடன் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், “மீட்டரில் ஊதிய பின்னர் சாவியை தந்தவிடுவதாக சொன்னதால்தானே ஊதினேன். இப்போது ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுகிறீர்களா” என போதையில் உளற ஆரம்பித்தார்.

தொடர்ந்து,”எதற்காக அபராதம் போட்டீர்கள், என்னிடம் காசு இல்லை. கட்டமுடியாது, தினமும் குடித்துவிட்டுதான் செல்கிறேன். அப்போது அபராதம் போடவில்லை, இப்போது ஏன் போடுகிறீர்கள்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், “நானே ஓசியில்தான் குடித்தேன். என்னால் எப்படி அபராதம் கட்டமுடியும்” எனவும் கூறினார். தொடர்ந்து தனக்கு ஏன் அபராதம் போட்டீர்கள் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். புத்தாண்டு அன்று சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. 

முன்னதாக, இளம்பெண்ணின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. போக்குவரத்து போலீசாருடன் இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.