செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி (59). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, போதையில், கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜீத்தும், ஹரிஹரனும் ஓசியில் பிரைடு ரைஸ் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
கொடுக்க முடியாது என்று ஜெயமணி கூறியதால், அங்கிருந்து கிளம்பியவர்கள், அரை மணி நேரம் கழித்து நண்பர்களுடன் வந்த விக்னேஷ், அஜித் ஜெயமணி மற்றும் அவரது நண்பர்களுடன் சண்டையிட ஆரம்பித்தனர்.
இதனை தொடர்ந்து கடாயில் இருந்த சூடான எண்ணெயை அவர்களின் மீது ஊற்றி கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். பின்னர், அவர்கள் ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பலத்த காயமடைந்த ஜெயமணி மற்றும் அவரது நண்பன் மணிகண்டன் ஆகியோரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பாக விக்னேஷ், பிரவீன், அஜித், சிவக்குமார், ஹரிஹரன் ஆகிய 5 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.