இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட் போட்டித்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்திய குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது
மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.