டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு | President Drabupati Murmu presented the Digital India Awards

புதுடில்லி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(ஜன.,07) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியவதாவது: டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் பிரதான நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும். நீதித்துறை, நிலப்பதிவு, உரம் அல்லது பொது விநியோக முறை என அனைத்து குடிமக்களுக்கும் எளிதாக வாழ்வதற்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நமக்கு நாமே சவால் விட வேண்டும்.

இந்திய பொறியாளர்களை உலகளாவிய மாற்றுவதற்கு இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியத் திறமையாளர்களின் மதிப்பை உலகுக்கு உணர்த்துவதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளன. மேட்-இன்-இந்திய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகளுக்கான உலகளாவிய மையமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.