
எல்லோரும் ரொம்ப ஹாப்பி.. வந்தாச்சு நம்ம ஜி.பி: வைரலாகும் குக் வித் கோமாளி புரோமோ!
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் ஜி.பி.முத்து. பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து இருந்த காலக்கட்டம் வரையிலும் அவர் மட்டுமே தான் பேசுபொருளாக இருந்து வந்தார். அந்த அளவிற்கு அவரது எதார்த்தமான குணம் மக்களை ரசிக்க வைத்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் இன்றளவும் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் பிக்பாஸை காட்டிலும் சூப்பர்ஹிட் ஷோவான குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து தற்போது எண்ட்ரியாகி உள்ளார்.
முதல் மூன்று சீசன்களின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரோமோவும் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நடுவர்களான வெங்கடேஷ் பட், தாமுவுடன் ரக்சன், மணிமேகலை, சுனிதா மற்றும் ஜி.பி. முத்து ஆகியோர் ஜாலியாக நடனமாடுகின்றனர். இதில் ஜி.பி.முத்துவின் எண்ட்ரி தான் ஹைலைட். ஜி.பி.முத்துவின் இந்த ரீ-எண்ட்ரிக்கு நேயர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.