விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது.? போலீஸ் அளித்த டீயை குடிக்க மறுத்த அகிலேஷ்.!

சமாஜ்வாதி கட்சித் தலைவர்
அகிலேஷ் யாதவ்
, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் துறையினர் அளித்த விஷம் கலந்திருந்தால் என்ன செய்வது என கூறி டீயைக் குடிக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமாஜ்வாடி தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோ காவல்துறை தலைமையகத்திற்குச் சென்றிருந்தார், அங்கு பாஜக தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாக கட்சியுடன் தொடர்புடைய ட்விட்டர் கணக்கை நடத்தி வரும் மணீஷ் ஜெகன் அகர்வால் கைது செய்யப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்தார்.

இன்று காலை 11 மணியளவில் காவல்துறை தலைமையகத்தை அடைந்த அகிலேஷ் யாதவ், தனது கட்சியின் சமூக ஊடகப் பணியாளர் மனிஷ் ஜெகன் அகர்வால் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார். எந்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரியும் தன்னுடன் பேச வரவில்லை என்று யாதவ் கூறினார். அவர் போலீஸ் தலைமையகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தங்கியிருந்தபோது கட்சியினர் பலர் வெளியே கூடினர்.

உயர் அதிகாரிகள் இல்லாததால் போலீசார் அவருக்கு டீ அளித்தன. அதை குடிக்க மறுத்த அகிலேஷ், “நான் இங்கே டீ குடிக்க மாட்டேன். நான் சொந்தமாக கொண்டு வருகிறேன், ஆனால் உங்கள் கோப்பையை எடுத்துக் கொள்ளலாம். இங்கே வழங்கப்படும் டீயை என்னால் குடிக்க முடியாது. நீங்கள் எனக்கு விஷம் கொடுத்தால் என்ன செய்வது? எனக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் மீது நம்பிக்கை இல்லை. நான் வெளியில் இருந்து டீ கொண்டு வருகிறேன்,” என்று அவர் போலீஸ் அதிகாரிகளிடம் கூறுவதை வீடியோவில் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ஒரு கட்சி ஊழியரை வெளியில் இருந்து டீ வாங்கச் சொல்லி குடித்தார்.

தகவல் அறிந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல் அளித்த புகாரை ஏற்றுக்கொண்டனர். அதில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மீது பாஜக ஐடி செல் ஊழியர் ரிச்சா ராஜ்புத் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மனிஷ் ஜெகன் அகர்வாலை சந்திக்க அகிலேஷ் யாதவ் லக்னோ சிறைக்கு சென்றார்.

22 மாநிலங்களில் முதலீடு..அனைத்தும் பாஜக ஆளுபவை அல்ல..அதானி விளக்கம்.!

சமீபத்தில் கைது செய்யப்பட்ட சமாஜ்வாதி கட்சி தொண்டர் மீது ரிச்சா ராஜ்புத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். சமாஜவாதி கட்சியினர் தன்னை பலாத்காரம் செய்வதாக மிரட்டியதாகவும், சமூக ஊடகங்களில் தனது இமேஜை கேவலப்படுத்தியதாகவும், தனது உயிருக்கும் பாதுகாப்புக்கும் பயப்படுவதாகவும் ராஜ்புத் குற்றம் சாட்டியிருந்தார். அதன் அடிப்படையில் சமாஜ்வாடி டிவிட்டர் கணக்கை நடத்தி வரும் மணீஷ் ஜெகன் அகர்வால் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.