கேட் மிடில்டன் தொடர்பில் மேகன் மெர்க்கல் கூறியதில் உண்மை இல்லை: இளவரசர் ஹரி வெளிப்படை


ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் தமது மனைவி மேகன் மெர்க்கல் கூறிய கருத்து உண்மை அல்ல என ஹரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக பகிர்ந்த ஹரி

இளவரசர் ஹரியின் Spare என்ற நினைவுக்குறிப்புகள் புத்தகம் ஸ்பெயின் நாட்டில் வெளியாகியுள்ளது.
குறித்த புத்தகத்தில் பல உண்மைகளை ஹரி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

கேட் மிடில்டன் தொடர்பில் மேகன் மெர்க்கல் கூறியதில் உண்மை இல்லை: இளவரசர் ஹரி வெளிப்படை | Meghan Markle Misled About Kate Middleton Feud

@royal

17 வயது முதல் போதை மருந்து பயன்படுத்தியதும், வயதுக்கு மூத்த பெண்ணுடன் முதன்முறையாக உறவு வைத்துக் கொண்டதும், தாலிபான் போராட்டக்காரர்கள் 25 பேர்களை கொன்றதும்,

தாயார் மறைவுக்கு பின்னர் தனித்துவிடப்பட்டதும், சகோதரர் வில்லியம் எட்டித்தள்ளி ரத்த காயம் ஏற்படுத்தியதும் என வாழ்க்கையில் தாம் எதிர்கொண்ட முக்கிய தருணங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

மனக்கசப்பை ஏற்படுத்திய விடயம்

இந்த புத்தகத்திலேயே, தமது அண்ணியார் கேட் மிடில்டனுடன் தமது மனைவி மேகன் மெர்க்கலுக்கு மனக்கசப்பை ஏற்படுத்திய விடயம் தொடர்பில் ஹரி விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே, ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் இது தொடர்பில் பேசியிருந்த மேகன் மெர்க்கல், பூக்கூடை சுமக்கும் சிறுமிகளுக்கான உடை தொடர்பில் கேட் மிடில்டனுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

கேட் மிடில்டன் தொடர்பில் மேகன் மெர்க்கல் கூறியதில் உண்மை இல்லை: இளவரசர் ஹரி வெளிப்படை | Meghan Markle Misled About Kate Middleton Feud

@getty

ஆனால் உண்மையில் மேகன் கூறிய சில கருத்துகளே கேட் மிடில்டனை முகம் வாட வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கேட் மிடில்டனை மூளை வளர்ச்சி குன்றியவர் என்ற அர்த்தத்தில் மேகன் மெர்க்கல் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலாக, நாம் ஒன்றும் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்ல, இதுபோன்ற கருத்தை பகிர்ந்துகொள்ள என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.