"முருங்கையில் இல்லாத இரும்பு சத்தா? நம்மிடம் இல்லாத மருத்துவமா?"-வெள்ளிமலை விழாவில் சீமான்

இயற்கை மற்றும் இயற்கை மருத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என ‘வெள்ளிமலை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

வெள்ளிமலை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் மிஷ்கின், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் மு.ளு.ரவிக்குமார் திரைப்பட இயக்குனர்கள் பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வெள்ளிமலை திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

image

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ஐ.லியோனி பேசியபோது, “வெள்ளிமலை திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. சீமான் எப்போதும் எளிமையாக இருப்பவர். படங்களில் மண்ணின் பண்பாட்டை காண்பித்தவர். இயக்குநர் கேஎஸ்.ரவிக்குமார். இயக்குநர் என்.ஆர். ரகுநந்தன், தயாரிப்பாளர், நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வாழ்வில் பழமையை மறக்கக் கூடாது. மக்களை நேசிக்கிற மனிதர் மூலம் தான் உதவி செய்ய முடியும். வேலையை ரசிச்சு செய்ய வேண்டும். எளிமையான மக்கள் என்றும் தோற்ற சரித்திரம் இல்லை. இந்த படத்தில் அருமையான பாடலை பாட வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அரைமணி நேரத்தில் சொல்லிக் கொடுத்து பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர்” என்று பேசினார்.

image

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், லியோனி அண்ணா போல் எழுத முடியாது. தலைமுறையாய் இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிற ஒருவர். மிக சிறந்த படைப்புகளை தந்தவர் கே.எஸ். ரவிக்குமார். பாடல் வெளயீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்றார் தமிழ் மருத்துவம் குறித்த படம் என்றதும் வருகிறேன் என்றேன். ஜென்மம் நிறைந்தது எனும் பாட்டில் என்.ஆர். ரகுநந்தன் ஜென்மம் நிறைந்தது. அண்ணன் லியோனி அவர்கள் பாடியது கூடுதல் சிறப்பு. நாம் இயற்கையின் பிள்ளைகள். ஆங்கிலம் அறிவல்ல ஒரு மொழி. அமெரிக்காவில் பிச்சை எடுப்பவன் கூட இங்கிலீஷ்ல தான் பேசுவான்.

image

அதே போல் தான் இங்கிலீஷ் மருத்துவம். சாப்பிட்ட சாப்பாடு சேமித்ததா? என்று அறிந்து சாப்பிடுவது தான் தமிழக மருத்துவம். 32 முறை மென்று சாப்பிட வேண்டும். நம்ம கிட்ட இல்லாத மருத்துவம் என்ன இருக்கு. எவ்வளவு இங்கிலீஷ் மருத்துவம் வந்தாலும் டெங்குவிற்கு நிலவேம்பு தான் தற்போது வரை கொடுக்கபடுகிறது.

இயற்கை பிரசவம் ஒழிந்து போயிற்று. கல்வி, தண்ணீர் எல்லாம் வியாபாரம் ஆகிற்று. முருங்கையில் இல்லாத இரும்பு சத்தா?. நம்மிடம் இல்லாத மருத்துவமா?. ஆலமரம் 24 மணிநேரமும் ஆக்சிஜனை வெளியிடும் ஆதனால் தான் தமிழன் ஆலமரங்களை ஊர் நடுவில் நட்டான். பல உலக நாடுகளில் பழைய கஞ்சியை பாட்டிலில் வைத்து விற்று வருகின்றனர். எடுத்ததும் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிரஹாம்பெல், ரைட் சகோதரர்கள், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரது படைப்புகளை எல்லாம் எளிதில் எற்றுக்கொள்ள வில்லை. பழமையை மறக்கக் கூடாது பழையது என்பதற்காக அதை புதைத்து விடுவீர்களா?

image

நாட்டின் நலன் வீடு அடுபடியில் தெரியும். இயற்கை தாய் மற்றும் மருத்துவத்தை காப்பாற்ற வேண்டும். மருத்துவக் குறிப்புகள் கோடி கோடி. எடுத்துச் செல்லத்தான் ஆள் இல்லை. ஆனால், ஒரு தலைமுறை எழுந்து வருகிறது அதன் சாட்சி தான் இந்த படம். இது ஒரு நல்ல தொடக்கம். விவசாயம் நம் வாழ்வியல். மொழி தான் நம் அடையாளம், வரலாறு. இம்மொழியின் துணையின்றி தனித்து இயங்கும் மொழி. தமிழில் சொற்கள் அதிகம் தாயை பழித்தவனை விட்டாலும் விடு தமிழை பழித்தவனை விடாதே” என்று சீமான் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வேல ராமமூர்த்தி, மிஷ்கின் உள்ளிட்டோரும் பேசினர். அவர்கள் பேசிய வீடியோ தொகுப்பை கீழே பார்க்கலாம்.. 

வேலராமமூர்த்தி பேசுகையில் இயக்குநரின் எளிமையை குறித்து புகழ்ந்து பேசினார்…

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில் இயக்குநர் மணிகண்டன் குறித்து கடைசி விவசாயி படம் குறித்து பேசினார். எத்தனையோ படங்களை 200, 300 கோடிகளில் ஓட வைக்கிறோம். ஆனால், கடைசி விவசாயி படத்திற்கு வெறும் 30 கோடி ரூபாய் தான் வசூல் ஆனது. கடைசி விவசாயி படத்தை அதிக அளவில் வெற்றி அடையாமல் செய்துவிட்டோம். அதேபோல் இந்த படத்திற்கு நடந்துவிடக் கூடாது. படம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். படம் நன்றாக இருக்கும்பட்சத்தில் நாம் அதிக அளவில் ஓட வைக்க வேண்டும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.