ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை ரயிலில் அடிபட்டு ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி திருப்பதி(45) என்பது தெரியவந்தது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
அது கட்டிட தொழிலாளி திருப்பதி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதற்கு முன்பு பதிவிட்டது. அதில், வாங்காத கடனுக்காக என்னை மிரட்டுகிறார்கள், காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து 2 தம்பதிகள் உட்பட 5 பேரை நேற்று போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.