மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம்


மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை பத்திரம் இன்றைய தினம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அமைச்சரவை பத்திரம் தொடர்பான தீர்மானம்

இந்த அமைச்சரவை பத்திரம் குறித்த தீர்மானத்தை ஒத்திவைப்பதாக கடந்த இரு சந்தர்ப்பங்களிலும் தீர்மானிக்கப்பட்டது.

மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ள மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் | Electricity Bill In Sri Lanka Cabinet Decision

இன்றைய தினம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டாலும் மீண்டும் இது குறித்த தீர்மானம் எடுக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படும என அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த யோசனைக்கு சில அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதனால் இவ்வாறான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.