டெல் அவிவ் : இஸ்ரேலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையில் அறிவித்துள்ள கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் புதிய அரசுக்கு எதிராக இங்கு போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தையும், நீதித்துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையை கண்டித்து, இந்த போராட்டம் வெடித்துள்ளன.
டெல் அவிவ் நகரின் முக்கிய இடங்களில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘எங்கள் நாடு ஜனநாயகத்தை இழக்க போகிறது என்ற பயம் வந்துள்ளது. சர்வாதிகார ஆட்சிக்கு நாடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது’ என, கோஷம் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement