சென்னை: 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆளுநர் தனது உரையை வாசித்தார். உரையைத் தொடங்கியவுடன் “தமிழக சகோதர – சகோதரிகளுக்கு வணக்கம்” என்று ஆளுநர் தமிழில் தெரிவித்தார். மேலும் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை […]
