நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரை
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தமிழில் வாசித்து தொடங்கினார்
ஆளுநர் உரைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் அமளி – முழக்கம்
திமுக கூட்டணி கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
2.19 கோடி குடும்பங்களுக்கு ரூ.2,429 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி
தமிழக அரசின் நடவடிக்கையால், வடகிழக்குப் பருவமழை மற்றும் புயலால் பெரிய அளவில் சேதம் இல்லை
ஆளுநர் உரையை புறக்கணித்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு
வாழ்க வாழ்க வாழ்கவே, தமிழ்நாடு வாழ்கவே என திமுக கூட்டணி கட்சிகள் முழக்கம்
தமிழ்நாட்டை முதலமைச்சர் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி
காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், தவாக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி பாமக எம்எல்ஏக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதன்முறையாக காகிதம் இல்லாத உரையாக கணினி திரையைப் பார்த்து ஆளுநர் உரை
தமிழகம் என குறிப்பிடாமல் “தமிழ்நாடு” எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
தமிழ்நாட்டில் 4,457 நியாயவிலை கடைகள் புதுப்பொலிவு பெற்று திறக்கப்பட்டுள்ளன – ஆளுநர் உரையில் தகவல்
தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் – ஆளுநர் உரை
பால் உற்பத்தியாளர் பயன் அடையும் வகையில் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி நடவடிக்கை – ஆளுநர் உரை
குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை முற்றாக அழித்தொழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை
இல்லங்களை தேடி சென்று மருத்துவம் அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் மூலம் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம், விபத்தில் சிக்குபவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட, தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது; அதை தடுப்பதில் தமிழ்நாடு அரசு உறுதி
முதலமைச்சர் தலைமையின் கீழ் காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கை
முல்லை பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சென்னை புத்தக காட்சியை, சர்வதேச அளவிலான புத்தக காட்சியாக மாற்ற, கொண்டு செல்ல நடவடிக்கை
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை 1,800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்புடன் தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது
தமிழ்நாட்டில் ரூ.1500 கோடியில், நீர்வள ஆதாரங்களை பெருக்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்கிறது
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த மதிய உணவு திட்டம், நாட்டிற்கே முன்னுதாரணமாக உள்ளது
2030க்குள் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் கொண்டதாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் செயல்படுகிறார்
சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் – ஆளுநர் உரை
2021ல் புதிய அரசு அமைந்த நாள் முதல், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன – ஆளுநர் உரை
தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மினி டைடல் பார்க்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன
தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையில் ரூ.600 கோடியில் ஐடி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது
பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ரூ.15,000 கோடியில் 103 குடிநீர் திட்டங்கள்
மாமல்லபுரம் அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
ரூ.190 கோடியில் 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது – ஆளுநர் உரை
மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மூலம், பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது
தமிழ்நாடு முழுவதும் ரூ.5,582 கோடி மதிப்பீட்டில், சாலைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது – ஆளுநர் உரை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு 500 மின்சார பேருந்துகள் கொள்வனவு செய்யப்படும் – ஆளுநர் உரை
தமிழரின் பெருமையை எடுத்துரைக்கும் கீழடியில், உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது
ரூ.158 கோடியில் 34 திருக்கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன – ஆளுநர் உரை