Gold Rate: உயரும் தங்கத்தின் விலை! ஒரு சவரனுக்கு ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

Gold Price Increased: இன்று காலை (09/01/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து, 5,260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 42,080 ரூபாயாக உள்ளது. வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,622 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ. 42080.00 ஆகவும், ஒரு கிராம் ரூ. 5260.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.52,210 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 56,960.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, 74.90 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல இன்று (09 ஜனவரி 2023) டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 51,450 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கம் 56,110 ஆகவும் உள்ளது. 

கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 51,300 ஆகவும், 10 கிராம் 24 காரட் ரூ. 55,960 ஆக உள்ளது. மும்பையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 51,300 மற்றும் ரூ. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 55,960 ஆக உள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் காலை 8 மணி அடிப்படையில் கூறப்படுட்டுள்ளது. இந்த விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட, சர்வதேச சந்தையின் பணவீக்கம், மத்திய வங்கிகளின் தங்க இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச்சந்தை, இயற்கை காரணிகள், வர்த்தகப் போர்கள் போன்ற பல காரணங்கள் இருப்பதாக கோல்ட் மார்க்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.