கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே பாலப்பள்ளம் ஒற்றப்பனவிளையை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி சிவஜோதி. இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2 ம் தேதி வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளர். அப்போது வரும் வழியில் சேவிளையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மரியதாஸ் என்பவர் சிவஜோதியிடம் தகராறு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவஜோதி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் மரியதாசிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சிவஜோதி ஒற்றப்பனவிளை பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மரியதாஸ் மீண்டும் அவரை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளார்.
இது தொடர்பாக சிவஜோதி மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியதாசை கைது செய்தனர்.