சுற்றுலா பயணிகளை அசத்திய காத்தாடித் திருவிழா: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்பு..!!

குஜராத்: அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச காத்தாடி திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். கொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச காத்தாடி திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த காத்தாடி  கலைஞர்கள் பங்கேற்று வித விதமான காத்தாடிகளை பறக்கவிட்டனர்.

பங்கேற்பாளர்கள் பறக்கவிட்ட ராட்சச காத்தாடிகளால் அகமதாபாத்திற்கு மேலே உள்ள வானம் பல்வேறு வண்ணங்களாலும், வடிவங்களாலும் நிரம்பியது. 68 நாடுகளை சேர்ந்த 125 காத்தாடி கலைஞர்கள் குழு ஜி 20 உச்சி மாநாட்டை கருப்பொருளாக கொண்ட காத்தாடிகளை பறக்கவிட்டது. குஜராத்தில் மகர சங்கராந்தி முன்னதாக உத்தராயண காலம் என கருதப்படும். ஜனவரியில் காத்தாடி திருவிழா நடத்தபடுகிறது. ஒரு வார காலம் நடைபெரும் இந்த திருவிழாவிற்கென்றே உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் புறப்பட்டுவருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.