என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார்


மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர், தம்மை டேட்டிங் செயலிகளில் தடை செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

தம்மை தடை செய்துள்ளனர்

அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்தே அந்த இளைஞரை டேட்டிங் செயலிகளில் தடை செய்துள்ளனர்.
23 வயதான Patrick Thelwell இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், முக்கிய இரு டேட்டிங் செயலிகளில் இருந்தும் தம்மை தடை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார் | King Charles Egging Student Banned

@reuters

கடந்த நவம்பர் மாதம் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியதாக கூறி, Patrick Thelwell என்ற மாணவர் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கினார்.
ஆனால், மன்னர் மீது அவர் வீசிய நான்கு முட்டைகளும் குறி தவறியுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு 5,000 பவுண்டுகள் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டிசம்பர் மாதம் அவர் மீது அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார் | King Charles Egging Student Banned

@instagram

விதிகளை மதிக்கவில்லை

மேலும், ஜனவரி 20ம் திகதி அவர் யார்க் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
தாம் டேட்டிங் செயலிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள Patrick Thelwell, நாட்டின் விதிகளை மதிக்கவில்லை என்றால் அவர் உங்களை டேட்டிங் செய்யவும் அனுமதிக்கமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

என்னை அதில் இருந்தும் தடை செய்துவிட்டார்கள்: சார்லஸ் மன்னர் மீது முட்டை வீசிய இளைஞர் புகார் | King Charles Egging Student Banned

@instagram



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.