புதுசா மாறும் சென்னை… ரெடியான மாடம்பாக்கம் மாஸ்டர் பிளான்… புது ரூட்டில் CMDA!

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் முதல் நாள் கடந்து சென்றுள்ளது. அடுத்து ஆளுநர் திரும்பப் பெறப்படுவாரா? இல்லை ஆட்சிக்கு ஏதேனும் சிக்கல் வருமா? என்று கேட்கும் அளவிற்கு காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சி.எம்.டி.ஏ தீவிரம்ஆளுநர் சர்ச்சைக்கு மத்தியில் தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களை மறந்துவிடக் கூடாது. குறிப்பாக புதிய நகர வளர்ச்சி குழுமங்கள், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA), மாடம்பாக்கம் நிலத்திரட்டு ஆகியவை கவனம் ஈர்க்கக்கூடிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் சென்னை மாநகரை விரிவுபடுத்தும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) மும்முரம் காட்டி வருகிறது.
மாடம்பாக்கம் நிலத்திரட்டுஅந்த வகையில் மாடம்பாக்கத்தை குறிவைத்து அடுத்த திட்டத்தை களமிறக்க உள்ளனர். ஆளுநர் உரையில், சென்னை பெருநகரின் வேகமான வளர்ச்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும். இந்த பெருநகரை சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சி என்பது அவசியம்.
அந்த வகையில் சென்னைக்கு அருகே உள்ள மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் நிலத்திரட்டு (Land Pooling) முறையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம் துணை நகரம்இதற்காக நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்கள் திரட்டப்படும். பல்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப்படும். அதேசமயம் நில உரிமையாளர்களுக்கு பங்கீடு செய்து வழங்கப்படும்.
இதையடுத்து புறநகர் வளர்ச்சிக்கு வித்திடும் பணிகள் விரைவாக நடைபெறும். அடுத்தகட்டமாக இதே நிலத்திரட்டு முறையின் மூலம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும்.
வேகமெடுக்கும் CUMTAஇந்த சாலை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது. இதனால் சென்னை பெருநகர பகுதி அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து CUMTA-வின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர பகுதிக்கான போக்குவரத்து திட்டங்களை தயாரிக்கவும், பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் போக்குவரத்து அமைப்புகள், சேவைகளை ஒருங்கிணைக்கவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
மூன்று முத்தான திட்டங்கள்பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் தற்போதைய திமுக அரசு புத்துயிர் அளித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் CUMTA-வின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறை, பல்வழிப் போக்குவரத்து திட்டம், பெண்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஆகிய விஷயங்கள் ஆலோசித்து முடுக்கி விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.