மின் பரிமாற்ற இணைப்பு: இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா – இலங்கை திட்டமா..!


இரண்டு நாடுகளுக்கிடையிலும் மின்சாரப் பரிமாற்ற இணைப்பை அமைப்பதற்காக
இந்தியாவும் இலங்கையும் ‘உயர் மட்டத்தில்’ இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு
திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா
ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான பூர்வாங்க அறிக்கையை தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மின்சார
பற்றாக்குறை முடங்கியதன் பின்னணியில் ஆரம்பப் பேச்சுவார்த்தை
இடம்பெற்றுள்ளது.

உயர் அரசியல் மட்ட பேச்சுவார்த்தை

மின் பரிமாற்ற இணைப்பு: இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா - இலங்கை திட்டமா..! | India Sri Lanka Power Transfer Link

இலங்கையில் உள்ள தனது உயர்ஸ்தானிகரகத்தின் மூலம் இந்திய அரசாங்கம் தனது
முயற்சிகளைத் தொடர்கிறதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும்
இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் உள்ளது.

இந்தநிலையில் தற்போது உயர் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட
வேண்டும் என்று இரு தரப்பினரும் கருதுவதாக இந்திய செய்தித்தளம் கூறுகிறது.

எனினும் இது தொடர்பில் இந்திய மத்திய மின்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம்,
புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம்
ஆகியவற்றின் கருத்துக்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.