அண்ணா இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா – தமன் உருக்கம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு.தில்ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் வாரிசுக்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. படத்தின் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி படம் முழுக்க தெலுங்கு வாடை அடிக்கப்போவதை ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக ஒரு தரப்பினரும், ட்ரெய்லரில் விஜய் பக்காவாக இருக்கிறார். படம் பக்கா ஃபேமிலி பேக்கஜாகவும், எமோஷனலாகவும் இருக்கப்போவதை ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாகவும் மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர். படமானது நாளை வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா எல்லா எமோஷனல் காட்சிகளையும் பார்த்து நான் இதயத்திலிருந்து அழுதேன் அண்ணா! கண்ணீர் விலைமதிப்பற்றது.

வாரிசு திரைப்படம் எனது குடும்பம் அண்ணா; இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வாரிசு திரைப்படத்திற்கான வெளிநாட்டு உரிமை பல மாதங்களுக்கு முன்பே விற்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் படத்தின் அமெரிக்க, கனடா நாடுகளுக்கான தணிக்கை நடைபெற்றது. அதில் அந்த திரைப்படத்தை தணிக்கை குழுவினர் ரிஜெக்ட் செய்திருக்கின்றனர் என கூறப்படுகிறது.  குறிப்பாக படம் முழுமையாக தயாராகாத காரணத்தால் அவர்கள் படத்தை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வாரிசு படம் 14ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.