வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) பார்க்கிறது என பிரதமர் மோடி முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசினார்.

மத்திய பிரதேசத்தில் இன்று(ஜன.,11) உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியவதாவது: வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் மத்திய பிரதேசம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
இந்தியா 2014 முதல் சீர்திருத்தம், வெளிப்பாடு சிறப்பான செயல்பாட்டின் பாதையில் உள்ளது. இதன் விளைவாக, இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் இந்தியாவின் மீது நம்பிக்கையைக் கொண்டுள்ளன.
அதே நம்பிக்கையை உலக முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில், சிலர் தனியார் துறையையும் நம்பி செயல்பட்டு வருகிறது. தனியார் துறைக்காக பல்வேறு வசதிகளை செய்துள்ளோம்.

இந்தியர்களாகிய நாம் மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் நிபுணர்களும் இதில் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) பார்க்கிறது.
பல நாடுகளை விட, உலகளாவிய பிரச்னைகளை சமாளிக்க இந்தியா சிறந்த நிலையில் இருப்பதாக உலக வங்கி கூறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், இந்த உச்சி மாநாடு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும் எனக் கூறியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement