கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி இன்று வழக்கம் போல் நடைபெற்ற சந்தைக்கு ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர் மற்றும் பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து மக்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த மாதம் 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வார சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்றைய வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
அங்கு ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சந்தை தொடங்கி சுமார் இரண்டு மணி நேரத்திலேயே ரூ. இரண்டு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.