சென்னை: சென்னை கோட்டத்தில் உள்ள 28 முக்கிய ரயில் நிலையங்களில் வாகன சார்ஜிங் வசதியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மந்தைவெளி, சைதாப்பேட்டை ரயில்நிலையங்களில் வாகன சார்ஜிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களில் நிறுவப்பட உள்ள சார்ஜிங் வசதி 24 மணி நேரமும் செயல்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
