சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் (SDAT – Sports Development authority of Tamilnadu) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , முதலமைச்சரின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படவுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் […]
