வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ. செய்தி தொடரபாளர் நுபுர் சர்மாவுக்கு டில்லி போலீஸ் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து நுபுர் சர்மா மீது பா.ஜ., மேலிடம் நடவடிக்கை எடுத்து அவரை கடந்தாண்டு ஜூனில் சஸ்பெண்ட் செய்தது. நுபுர் சர்மாவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணையை டில்லிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]() |
இந்நிலையில் தனக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதால்,உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தன் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும் என டில்லி போலீசாரிடம் நுபுர் சர்மா விண்ணப்பிதிருந்தார். விண்ணப்பத்தை ஏற்ற டில்லி போலீஸ் தற்காப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கி உரிமம் வழங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement