சென்னை: பள்ளிக் கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என கலைத்திருவிழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கூறியுள்ளார். நாளைய தமிழ்நாட்டை காக்கும் லட்சியவாதிகளாய் மாணவர்கள் இருக்க போகிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
