
பிரான்ஸின் (கரே டு நோர்டு) Gare du Nord ரயில் நிலையத்தில் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் தன் மடிக்கணினி காணாமல் போனதையடுத்து, ஒருவர் ஆத்திரத்தில் காரை அந்த ஹோட்டலின் வரவேற்பறையின் மீது மோதினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஈழப் போரில் மனித உரிமை மீறப்பட்டதாக கோத்தபய, மகிந்த ராஜபக்சே உட்பட நான்கு பேர் கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

உகாண்டாவில் தொடர்ந்து 42-வது நாளாக புதிதாக எபோலா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பெருவில் டினா பொலுவார்டே (Dina Boluarte) அதிபர் பதவியிலிருந்து விலகக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிராகப் போர் புரிய மறுத்த 24 வயது ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2019-ல் இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு இழப்பீடாக, அப்போதைய அதிபர் சிறிசேனா 100 மில்லியன் வழங்க வேண்டும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

டிசம்பர் மாதம் நிலவிலிருந்து திரும்பிய ‘ஆர்ட்டெமிஸ் ஓரியான்’ (Artemis I Orion) விண்கலத்தை நாசா தற்போது ஆய்வு செய்து வருகிறது.

பெரும்பாலான சீன மக்கள் mRNA கோவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்காக ஹாங்காங்குக்கு பயணம் செய்து வருகின்றனர்.