அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டேட்டிங் செயலியில் சந்தித்த நபர் ஒருவரால் ஆரம்ப பள்ளி ஆசிரியர் வெண்டி டுவான் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியரான வெண்டி டுவான், MeetMe டேட்டிங் செயலியில் மூலம் ஆன்லைனில் அறிமுகமான சார்வாஸ் தாம்சன் என்ற இளைஞர் ஒருவரைச் சந்தித்து ஒரு வார காலமாக நட்பு பாராட்டி வந்து இருக்கிறார்.
இந்நிலையில் திடீரென கடந்த வாரம் வெண்டி டுவான், அவரது தோட்டத்தின் கொல்லைப்புறத்தில் பல முறை சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
KHOU 11
வீட்டில் நடந்த இந்த சம்பவத்தின் போது வெண்டி டுவான் கொல்லப்பட்டதாகவும், கொலையில் சந்தேகம் கொண்ட ஆண் ஒருவரை அடையாளம் கண்டு அவரை தேடி வருவதாகவும் பொலிஸார் அப்போது தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில் வெண்டி டுவான்(Wendy Duan) கொல்லப்பட்ட ஒரு வாரத்தில் அவளது காதலன் சார்வாஸ் தாம்சன் லூசியானாவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது மற்றும் அவரது பிணை பத்திரத்தை $500,000 நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
KHOU 11
தாயார் எச்சரிக்கை
குற்றவாளியை அடையாளம் காண விரும்பாத பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், இருவரும் MeetMe டேட்டிங் செயலியில் சந்தித்ததாகக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் ஒரு வாரம் மட்டுமே டேட்டிங் செய்ததாகவும், ஆனால் அவர்கள் சந்தித்த விதம் தனக்கு “சங்கடமானதாக” உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தாம்சனைப் பற்றி தனக்கு மோசமான உணர்வு இருப்பதாகவும் , ஆன்லைனில் அந்நியரை சந்திப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து டுவானை தொடர்ந்து எச்சரித்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளனர்.
KHOU 11
தனது மகளின் கொலை குறித்து பேசிய தாய் இது நம்பமுடியாதது. “அந்தப் பையன் மிகவும் கெட்டவன். அவளது உயிரைப் பறித்தான். அவனுக்கு முழு சட்டப்படியான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படாத நிலையில் சார்வாஸ் தாம்சனிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.