பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: பதவி விலகும் கட்டாயத்தில் லெ கிரேட்


பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று Le Monde சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு 

பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFF) தலைவர் நோயல் லெ கிரேட் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று Le Monde தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தணிக்கையின் போது, பல பிரான்ஸ் சர்வதேச வீரர்களின் முகவரான சோனியா சோயிட் அளித்த சாட்சியத்தை தொடர்ந்து பாரிஸ் அரசு வழக்கறிஞர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: பதவி விலகும் கட்டாயத்தில் லெ கிரேட் | French Football Boss Le Graet Faces Sexist ClaimNoel Le Graet

விளையாட்டு நாளிதழான L’Equipe மற்றும் ஒளிபரப்பாளர் RMC உடனான சோனியா சோயிட் (sonia souid) நேர்காணலின் போது, பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFF) தலைவர் நோயல் லெ கிரேட்-டின் தேவையற்ற பாலியல் முன்னேற்றங்களை குற்றம் சாட்டினார். 

மேலும் லெ கிரேட்-க்கு ஆர்வம் காட்டிய ஒரே விஷயம் என் மார்பகங்களும், என் பின்புறங்களும் தான் என்று வெளிப்படையாக கருத்தை உடைத்தார்.

விளையாட்டு அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெரா தெரிவித்த தகவலில், குற்றவியல் சட்டத்தின்படி அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டதாக தணிக்கை அமைப்பின் தலைவரால் தமக்கு அறிவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகும் கட்டாயம்

பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை தொடர்ந்து, 81 வயதான Le Graet விசாரணை முடியும் வரை பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிரான்ஸ் கால்பந்தாட்ட தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு: பதவி விலகும் கட்டாயத்தில் லெ கிரேட் | French Football Boss Le Graet Faces Sexist ClaimChristophe Ena, AP

இது தொடர்பாக சனிக்கிழமையன்று AFP க்கு Le Graet அளித்த அறிக்கையில், ஊடகங்களில் கசிந்த தகவலால் திகைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன் இடைக்கால அறிக்கை இன்னும் எனக்கு அனுப்பப்படவில்லை மற்றும் எனது அவதானிப்புகளை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை என்றாலும், தகவல்களை வெளியிடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பிரான்ஸ் சட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டு என்பது நபர் ஒருவரின் கண்ணியத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், மேலும் இந்த பாலியல் குற்றத்திற்கு 750 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.