அண்ணாமலை ஒரு பெருமைமிக்க கன்னடர் – காயத்ரி ரகுராம்

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் சரி என்று ஆளுநர் ரவி கூறிய கருத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கவில்லை. அது பற்றி அண்ணாமலை கூறியபோது, ஆளுநரின் தமிழகம் பெயர் மாற்ற பரிந்துரையை நான் ஏற்கவில்லை; தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். பிறப்பால் நான் பெருமைமிக்க தமிழன் என்றார் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த பேச்சை ஆர்.என். ரவிக்கு ஆதரவாக பேசி வந்தவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. பாஜகவில் குறிப்பிட்ட சமூகத்தினர் அண்ணாமலை மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள நிலையில் இது மேலும் கூட்டியுள்ளது. திருச்சி சூர்யா சிவா விஷயத்தில்கூட தமிழ்நாடு பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மறைமுகமாக எதிர்த்ததாக அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் உள்ளிட்ட சிலர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், கட்சிக்குள்ளேயே அண்ணாமலைக்கும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் முரண் இருந்து வருவதாகவும் கமலாலய வட்டாரத்தில் சொல்கின்றனர். இந்த நிலையில், அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் காயத்ரி ரகுராம் இன்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில், பெருமைமிக்க கன்னடிக அண்ணாமலை.. அவரது பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்ற வார்த்தை குறிப்பிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதில் நேற்றைய தந்தி பேட்டியில் கவர்னரின் பொங்கல் அழைப்பிதழை காட்டி கொடுக்கிறார். டெல்லியில் இருந்து தீனதயாள் உபாத்தியா தபால் தலை ஒட்ட வேண்டும் என்று தெரிந்த அண்ணாமலை, அவரது பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றே விட்டுள்ளனர்.

அண்ணாமலை ஒரு பெருமைமிக்க கன்னடர் என்று கர்நாடகாவில் ஒவ்வொரு முக்கிலும் மூலையிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவரை ஏன் தனது வளர்ப்புத் தந்தை வலுக்கட்டாயமாக தமிழகத்திற்கு அழைத்து வந்தார்? தமிழ்நாட்டில் பெருமைமிக்க தமிழனும் உண்மையான பாஜக தொண்டனும் இல்லையா?” என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.