ஒப்போ A78 5G போன் வெளியானது! 50 MP அசத்தல் கேமெரா வசதியுடன் ஒரு மிட் ரேஞ்சு போன்!

இந்தியாவில் புதிதாக ஒப்போ நிறுவனம் அதன் மிட் ரேஞ்சு பட்ஜெட் செக்மென்ட் போன் வெளியிட்டுள்ளது. இந்த போன் அதன் A சீரிஸ் செக்மென்ட்டில் வெளியாகியுள்ளது. இந்த போனில் நோட்ச் டிஸ்பிலே உள்ளது. இந்த போனில் Mediatek Helio Processor சிப் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போ மிட் ரேஞ்சு பட்ஜெட் போன்களில் அசத்தலாக 50MP டூயல் கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 18 முதல் Oppo e Store, Amazon மற்றும் நேரடி தளங்களில் விற்பனை செய்யப்படும்.

டிஸ்பிலே வசதிஇந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ (720×1612)Pixels IPS LCD ஸ்க்ரீன் வசதி உள்ளது. இதனுடன் 90HZ refresh rate, 269ppi Pixel அளவு, 89:9 Screen to Body Ratio போன்ற வசதிகள் உள்ளன.
போன் விவரம் இந்த ஸ்மார்ட்போனில் Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட ColorOS 13 உள்ளது. இதில் 7nm Mediatek Dimensity 700 SoC Processor உள்ளது. இதில் 8GB RAM மற்றும் UFS 2.2 வசதியுள்ள 128GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதனை 1TB வரை நாம் அதிகரித்துக்கொள்ளலாம். இதனுடன் நமக்கு MicroSD கார்டு வசதியும் உள்ளது.
பேட்டரி வசதிஇதில் 5000mAh பேட்டரி வசதியும் 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதனால் 100% சார்ஜிங் வெறும் 60 நிமிடங்களில் நடக்கும். இதன் எடை 188 கிலோ உள்ளது.
கேமரா வசதிஇந்த மாடலில் 50MP மெயின் கேமரா f/1.8 Aperture மற்றும் 2MP f/2.4 Aperture என டூயல் கேமரா வசதி உள்ளது. இதன் முன்பக்கம் 8MP f/2.0 Aperture செல்பி கேமரா வசதி உள்ளது.
மற்ற வசதிகள்கூடுதல் வசதிகளாக WiFi 5, ப்ளூடூத் 5.3, ஒரு 3.5mm ஆடியோ ஜாக் வசதி, USB டைப்-C போர்ட், GPS, A-GPS, GLONASS, Galileo, QZSS, OTG, Accelerometer, அம்பிஎண்ட் லைட் சென்சார், Geomagnetic சென்சார், க்ராவிட்டி சென்சார், பிடோமீட்டர், ப்ரோக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார், Face Unlock வசதி போன்றவை உள்ளன.
விலை விவரம்இந்த ஸ்மார்ட்போன் 18,999 ஆயிரம் ரூபாய் விலையில் (8GB RAM+ 128GB ஸ்டோரேஜ்) ஆப்ஷனில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Glowing Black, Glowing Blue ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 10% தள்ளுபடி விலையில் SBI கிரெடிட் கார்டு மூலம் வாங்கலாம். மேலும் 3,167 ஆயிரம் ரூபாய் EMI ஆப்ஷனிலும் கிடைக்கிறது.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.