மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய பாலமேட்டை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்ற வீரரை காளை முட்டியதில் உயிரிழந்தார்.
அதேபோன்று திருச்சி மாவட்டத்தை அடுத்த சூரியூர் ஜல்லிக்கட்டை பார்க்க சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த கண்ணன்கோன் பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாராதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/7n2p85Qh3Y
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 16, 2023