நேபாளம் நாட்டின் பொக்காரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விமானத்தில் உள்ள பதிவுகளை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா, பிஷால் சர்மா , அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோர் உயிரிழந்தனர்.
அந்த ஐந்து பேரில் நான்கு பேர் உத்தரப் பிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, முகநூலில் நேரலை செய்த இறுதி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது பார்ப்போரை பதற வைப்பதாக உள்ளது.
newstm.in