உடலில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்திய முறைகள்


பொதுவாக நம்மில் பலர் உடலில் சிறு நோய் ஏற்பட்டால் கூட மருந்துக்கடைகளை தான் முதலில் நாடுவார்கள். 

ஆனால் அந்தகாலத்தில் முன்னோர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் எளிய முறையில் நோய்களை குணப்படுத்தினார்கள். 

இந்தவரிசையில் உடலில் உள்ள நோய்களை போக்கும் சில எளிய பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.  

உடலில் வரும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில பாட்டி வைத்திய முறைகள் | Grandma S Remedies

  • புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
  • ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

  • மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

  • மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

  • வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

  • 4 அல்லது 5 வெங்காயத்தை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

  • இலவங்கப்பட்டை ஒன்றரை பலம் வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளை நெய்யில் கலந்து சாப்பிட இருமல் தீரும்.

  • எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.