திருநெல்வேலி மாவட்டத்தில் தாய்-தந்தை இறந்த துக்கத்தில் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வடிவாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சீமான். இவரது மகன் ஜெயசுரேஷ் (35). இவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டனர். மேலும் உடன்பிறந்த சகோதரரும் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.
இதனால் மன வேதனையில் இருந்த ஜெயசுரேஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து அக்கம் பக்கத்தினருக்கு ஜெயசுரேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெய சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.