கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்களில் நேற்று (17) குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் 113.72 புள்ளிகளால் அதிகரித்து 8,376.30 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 79.43 புள்ளிகளால் அதிகரித்து 2,607.51 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.
இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் முறையே 1.38% மற்றும் 3.14% ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய பண பரிவர்த்தனை 1.24 பில்லியன் ரூபாவாக பதிவாகியது.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் தனியார் நிறவனத்தின் பங்கின் விலை நேற்று (18) அதிகரித்ததனால், அனைத்து பங்கு விலைச் சுட்டெணகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 192.50 ரூபாவாக, அதாவது, 11.92 வீதத்தால் அதிகரித்துள்ளது.