சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி, மின்கட்டணம் உள்பட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் மனு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசுக்கு இணையாக தனியார் பேருந்து சேவைகளும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு இப்போதுவரை தனியார் பேருந்து நிறுவனங்களே மினி பேருந்துகளை இயங்கி வருகிறது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா […]
